புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதைஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் அறந்தாங்கி காவல்ஆய்வாளர் செந்தூர்பாண்டியின் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அறந்தாங்கி அங்காளம்மன் கோவில் பகுதியில் போதை மாத்திரை சிரஞ்ச வைத்திருந்த ராஜ்மோகன், சீனிவாசன் ராஜேஸ்வரன் உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரொக்கபணம் 11 630 ரூபாய் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மாத்திரை ஊசி பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு மேலும் இவர்களுக்கு போதைமாத்திரைகள் வழங்கியவர்கள் குறித்தும் தீவிர விசாரணையை போலீசார் தீவிரபடுத்தியுள்ளனர்.


0 Comments