சட்டவிரோதமாக ஈரோட்டில் தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 4 பேர் கைது


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வங்காளதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையையில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில், பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் பணிக்கம்பாளையத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தினர் 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனைவரும் பாஸ்போர்ட்டு, விசா இன்றி பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட இஸ்லாம் (30), ஷபான்மல்லி (27), முகமத் ஷாதிம் (30), மஜான் மொண்டல் (30) ஆகிய 4 பேரும் பெருந்துறையில் உள்ள ஜவுளி ஆலையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து வங்காளதேசத்தினர் 4 பேரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments