திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொம்மி அம்மாள் சமேத குரு முத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் சிறப்பு அம்சமாக, கோவிலில் 41 அடி உயரம் உள்ள ராஜலிங்கத்திற்கு 1,008 லிட்டர் பால் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.பாலாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவருக்கு இரவு முழுவதும் நான்கு கால பூஜை, விடிய விடிய அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

0 Comments