50ஆண்டுகளுக்கு பிறகு ரூ.6 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டல்.... மகிழ்ச்சியில் கிராம மக்கள்

 


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்மார் முதல் நிலை ஊராட்சியில் போலச்சேரி கிராமத்தில் பொன்மார் போலச்சேரி,டிஏபிசி ஆகிய மூன்று சாலைகளை இணைக்கும் முக்கூட்டு சாலையில்  தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6 கோடி மதிப்பில் மாம்பாக்கம் முதல் போலச்சேரி வரையிலும் ,டிஏபிசி அடுக்குமாடி குடியிருப்பு முதல் போலச்சேரி சாலை வரையிலும், பொன்மார் முதல் போலச்சேரி வரையுள்ள மூன்று சாலைகளுக்கு புதியதாக தார் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக விவசாய தொழிலாளர் அணியின் அமைப்பாளரும், பொன்மார் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவருமான பொன்மார் ஸ்ரீ. நாராயணன் தலைமை தாங்கினார். பொன்மார் முதல்நிலை ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட கழக மீனவர் அணி துணை அமைப்பாளருமான பொன்மார் டி .வெங்கடேசன் ,பொன்மார் ,மேலைகோட்டையூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மேலைக்கோட்டையூர் எல். சுரேஷ், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி துணை அமைப்பாளர் போலசேரி பி என் எஸ். செந்தில் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள் . பொன்மார் ஊராட்சி மன்றத்தின் 08வது வார்டு உறுப்பினர் போலச்சேரி ராஜா, மற்றும் 09வது வார்டு உறுப்பினர் போலச்சேரி பிஎன்எஸ் .தீபாசெந்தில்  ஆகியோர்கள் அனைவரையும் வரவேற்றனர்கள். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும் ஒன்றிய குழு பெருந்தலைவருமான எஸ் ஆர் எல். இதயவர்மன் கலந்துகொண்டு புதியதாக அமைக்கப்பட உள்ள மூன்று தார் சாலைக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில்  அடிக்கல் நாட்டில் பணிகளை துவங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துரையாற்றினார். 

இவருக்கு பொன்மார்  மற்றும் போலச்சேரி  மற்றும் டி எ பி சி அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் அனைவருடனும் இணைந்து சால்வையுடன் மாலை அணிவித்து  நன்றி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கட்சியினர்கள் சால்வை அணிவித்தும் கட்சி வேட்டி அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்கள். இந்நிகழ்வில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் வெண்பேடு இரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் மாம்பாக்கம் ஜிசி. அன்புச்செழியன், பனங்காட்டுப்பாக்கம், கொளத்தூர், மாம்பாக்கம், சோனலூர் வெளிச்சை ஆகிய ஊராட்சிகளின் ஒன்றிய குழு உறுப்பினர் பனங்காட்டுப்பாக்கம் த.அருண்குமார்  பொன்மார்  ஊராட்சியின் திமுக கிளை கழக நிர்வாகிகளான டி கே எஸ். குமார், எஸ். ரவிச்சந்திரன், எம். தேவிரக்கம்,பி.சேட்டு,ஆர்.செந்தில்குமார்,பொன்மார் வார்டு உறுப்பினர்களான மாலதிகணபதி, சுதாராணி பரணிதரன்,எம். நதியாமாரி, மகேஷ்குமார்,பி எம் எஸ் .ஜெயா சாமுண்டி, சத்யபிரியாராஜன், மற்றும் வனத்துறை அலுவலர்கள், பொன்மார் போலச்சேரி டி எ பி சி அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள் திமுக கட்சியினர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்கள். இதுகுறித்து பொன்மார் போலச்சேரி பொதுமக்கள் கூறுகையில் தற்பொழுது போடப்பட உள்ள பொன்மார் போலச்சேரி கிராம சாலையானது மத்திய வனத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது.

இச்சாலை கடந்த 1973 ஆம் ஆண்டு சாதாரண மண்சாலையாக போடப்பட்டது.அதன் பிறகு வனத்துறையின் அதிகப்படியான கெடுபடியால் இந்த சாலை கடந்த 50ஆண்டு காலத்திற்கு மேலாக போட முடியாமல் இருந்து வந்தது. இந்த சாலை போடப்படாததால் போலச்சேரியில் இருந்து பொன்மார் செல்பவர்கள் பொன்மாரிலிருந்து போலச்சேரி வருபவர்களும் அதேபோல் மாம்பாக்கத்திலிருந்து போலச்சேரி பொன்மார் வழியாக நாவலூர் தாழம்பூர் செல்பவர்களும் போலச்சேரி பொன்மார் உள்ள மற்றும் டிஏபிசி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வசித்துவந்த நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தோம்.

இந்த சாலையினை கடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டோம். குறிப்பாக மழைக்காலங்களில் இந்த மூன்று சாலைகளில் ஏற்படும் அபாயகரமான பெரும் பள்ளங்களில் தேங்கியிருக்கும் மழை நீரால்  இரவு நேரங்களிலும் சரி பகல் நேரங்களிலும் சரி பெருத்த விபத்து ஏற்பட்டு வந்தது. சொல்ல முடியாத துயரத்தில் நாங்கள் தவித்து வந்தோம். இந்த நிலைகுறித்து தற்போது தலைவராக உள்ள ஸ்ரீ நாராயணன் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம்.

 அவர் திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் இதயவர்மனிடம் எங்கள் சார்பாக சாலையை புதிதாக போட வேண்டி கோரிக்கை வைத்து அவரின் மூலமாக இந்த சாலைக்கு வனத்துறையால் அனுமதி பெற தொடர்ந்து இரண்டு ஆண்டு காலம் தொடர் முயற்சி செய்துவந்தார். இதன் பலனாக வனத்துறையானது  புதிய சாலை அமைப்பதற்கு உரிய அனுமதி வழங்கி உள்ளது.இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த சாலை  மற்றும் இரண்டு சாலைகளும் சேர்த்து சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக தார்சாலை அமைக்கப்பட உள்ளன. இதனால் எங்களின் 50 ஆண்டுகால சாலை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது . இந்த மூன்று சாலைகளும் அமைக்கப்பட உள்ளதால் பொன்மார்  முதல் நிலை ஊராட்சியில் தலைவர் ஸ்ரீ நாராயணன் ஓர் வரலாற்று சாதனை படைத்துள்ளார் என்று கூறலாம். இதற்கு முழுமுதற் காரணமாக தமிழக முதல்வர் அவர்களுக்கும் துணை முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களுக்கும் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ் ஆர் எல்‌ இதயவர்மன் எங்களின் ஊராட்சி மன்ற தலைவர் பொன்மார்  ஸ்ரீ. நாராயணன் துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் என  அனைவருக்கும் எங்களின்   நெஞ்சார்ந்த நன்றியினையும் ஆதரவினையும்  தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்கள். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக விவசாய தொழிலாளர் அணியின் அமைப்பாளரும் பொன்மார் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவருமான பொன்மார் ஸ்ரீ. நாராயணன் அனைவரையும் ஒருங்கிணைத்து செய்திருந்தார். வந்திருந்து கலந்துகொண்ட அனைவருக்கும் ஊராட்சி செயலர் காளீஸ்வரி நன்றி தெரிவித்தார்.

 கடந்த 50 ஆண்டு காலமாக நிலவி வந்த தங்களின் சாலை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பொன்மார் மற்றும் போலச்சேரி கிராம பொதுமக்கள் டிஏபிசி அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்கள் என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments