திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வெல்லும் பெண்கள் பாசறை பயிற்சி கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட இளம் பெண்கள் பயிற்சி பாசறை மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்ற இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் தலைமை பொறுப்பேற்றார். மாவட்ட அவைத் தலைவர் பகலவன் கொள்கை பரப்பு துணை செயலாளர் வெ. அன்புவாணன்.மாவட்ட துணை செயலாளர்கள் கே.வி.ஜி உமா மகேஸ்வரி கதிரவன் ரவி மாவட்ட பொருளாளர் ரமேஷ் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் முன்னிலையில் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜா, ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் பொன்னேரி தொகுதி வெல்லும் தமிழ் பெண்கள் பேரவை பொறுப்பாளர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி பாசறையின் ஆலோசனைகளை தலைமை கழக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி,மாநில பிரச்சாரக் குழு செயலாளர் சேலம் சுஜாதா ஆகியோர் வழங்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி,வெங்கடாஜலபதி,பா.செ.குணசேகரன் ஏ.வி.ராமமூர்த்தி,டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் மகளிர் அணி நிர்வாகிகள் தேசராணி தேசப்பன்,ஜெயலலிதா,உமா காத்தவராயன்,சுகன்யா, ரத்தினகுமாரி,காமாட்சி,நல யாழினி,பத்மா,பொன் செல்வி,ஜோதிலட்சுமி, சுந்தரி,விஜயமாலா, ஜெயசித்ரா,புஷ்பராணி,அமுதா,கோமளா,சுபாஷினி,வெற்றிச்செல்வி,சரண்யா,ருக்மணி மோகன்ராஜ் சகிலா அறிவழகன்,நிர்மலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்ற இந்த இந்நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத்தொகை5000. வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
மகளிர் அணி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சி சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் 2026 மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று. உறுதிமொழி ஏற்றனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கி.வேணுஆனந்த்.மணிபாலன் மு முரளிதரன் கா.சு ஜெகதீசன். நா. செல்வ சேகரன் வே ஆனந்த்குமார். நகர செயலாளர்கள். ரவிக்குமார் ஆரணி முத்து. தமிழ் உதயன். அறிவழகன். முன்னால் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர்கள் மீஞ்சூர் கிழக்கு கலாவதி,மேற்கு கலைச்செல்வி, தொண்டரணி அமைப்பாளர் சிவகாமி ஆகியோர் நன்றி கூறினர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.




0 Comments