நாகை மாவட்டத்தில் உள்ள 52 அரசு மதுபான கடைகள் மூடல்


தமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடை ஊழியர்களுக்கான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஊதிய உயர்வு, காலி மதுபான பாட்டில்களை திருப்ப பெறுவதில் அழுத்தம், பணி ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் 3 மணி நேரம் கடையடைத்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் அரசு மதுபான கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 52 அரசு மதுபானக் கடைகளை நண்பகல் 12.00 மணிமுதல் 03.00 மணி வரை அடைத்து ஊழியர்கள் பணி புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால், மதுபானம் வாங்க ஆர்வமுடன் வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நாகை மாவட்டத்தில் டாஸ்மாக கடைகள் மூடப்பட்டதால் காரைக்கால்  மதுபார்களில் மதுபிரியர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.

Post a Comment

0 Comments