அண்ணாவின் நினைவுநானை முன்னிட்டு, வல்லூரில் உள்ள திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே. ரமேஷ்ராஜ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அருகில் அவைத் தலைவர் பகலவன், ஒன்றிய செயலாளர்கள் முரளிதரன். சக்திவேல், செல்வ சேகரன், ராஜா,ஆனந்தகுமார், உதயசூரியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி தமிழரசன் அத்திப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல்.முன்னாள் கவுன்சிலர் சகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி நகரக் கழக சார்பில் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்கள் பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் நகர மன்ற தலைவர் பரிமளம்.விஸ்வநாதன். பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன் ராமலிங்கம் மூர்த்தி மற்றும் பொன்னேரி நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments