அரியலூர்: உடையார்பாளையம் ஸ்ரீ காசி விஸ்வநாதர், அருள்மிகு விசாலாட்சி, கோவிலில் 8 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது



அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் வடபுறம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் அருள்மிகு விசாலாட்சி கோவிலில் நேற்று 8 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முதல் காலம் இரவு 8 மணியளவில் அபிஷேகங்கள் நடைப்பெற்றது.2 ஆம் காலம் இரவு 11 மணியளவில் அபிஷேகங்கள் நடைப்பெற்றது.3 ஆம் காலம் இரவு 2 மணியளவில் அபிஷேகங்கள் நடைப்பெற்றது.4 ஆம் காலம் அதிகாலை 5 மணியளவில் அபிஷேகங்கள் நடைப்பெற்றது.இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து அபிஷேகங்களில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் மா.தங்கராசு, செயலாளர் த.சரவணன், உறுப்பினர்கள் சந்தோஷ், ஜீவா, செல்வகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.





Post a Comment

0 Comments