நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 893 குடியிருப்புகளுக்கு மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்


நாகப்பட்டினம் மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏற்கனவே பராமரிப்பில் உள்ள குடிநீர் குழாயிலிருந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் புதிய இணைப்பு பணிகள்  கீழ்வேளுர் ஒன்றியம், கீழ ஒதியத்தூர் மற்றும் ஓர்குடி பகுதிகளில் ஏற்கனவே பதிக்கப்பட்டுள்ள 500 மி.மீ விட்டமுள்ள பிரதான நீருந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் மற்றும் மின் மோட்டார் அறையில் ஏற்கனவே அமைந்துள்ள மின் மோட்டார்களை மாற்றி புதிய மின் மோட்டார் அமைக்கும் பணிகள்,  ஆகிய பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 18.02.2026 முதல் 20.02.2026 ஆகிய மூன்று நாட்களுக்கு நாகப்பட்டினம் நகராட்சி, கீழ்வேளுர், மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் கீழ்வேளுர், கீழையூர், தலைஞாயிறு, நாகப்பட்டினம், திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பராமரிப்புக்கோட்டம்,  நிர்வாகப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments