டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று இலங்கையின் பல்லேகல்லேவில் நடைபெறவிருந்த போட்டியில் அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோத இருந்தன.
இந்த நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்தது. மழை நின்ற பின்னர் போட்டி நடைபெறும் என்று நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன் மூலம் இரு அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஜிம்பாப்வே அணி முன்னதாக 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று இருந்தது. இந்த புள்ளியுடன் 5 புள்ளிகளை பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு ஜிம்பாப்வே அணி தகுதிபெற்றது. முக்கிய அணிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் நடையை கட்டியது குறிப்பிடத்தக்கது.

0 Comments