மாயூரம் கூட்டுறவு நகர வங்கி லிட் மயிலாடுதுறை பேரவைக்கூட்டம்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் மாயூரம் கூட்டுறவு நகர வங்கி லிட் மயிலாடுதுறை பேரவைக்கூட்டம் மாயூரம் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் செயலாட்சியர் மணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 2024 2025 ஆம் ஆண்டு சட்டபூர்வ பட்டய கணக்கரின் தணிக்கை அறிக்கை மற்றும் வங்கியின் 113 வது ஆண்டறிக்கியை வாசித்து பதிவு செய்தல், 2024 2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்தி பொறுப்பு அறிக்கை மற்றும் இலாப நட்ட கணக்குகளை அங்கீகரித்தல், 2024 2025 ஆம் ஆண்டு நிகர லாபத்தை சட்டம் விதிகள் வங்கி துணைவிதிக்கு ஏற்ப பிரிவினை செய்தல், 2024 2025 ஆம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அதிகப்படியான செலவின தொகைகளை அங்கீகரித்தல், 2026 2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி அளித்தல் உட்பட ஒன்பது அம்ச தீர்மானங்கள் இந்த கூட்டத்தின் வாயிலாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன இக்கூட்டத்தில் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர் கூட்டம் நிறைவாக மாயூரம் கூட்டுறவு நகர வங்கி பொது மேலாளர் பாலகிருஷ்ணன் நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.

Post a Comment

0 Comments