பழவேற்காட்டில் உலக யோகா தினத்தில் பங்குபெற்ற மீனவ மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு அங்கிகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
உலக யோகா தினத்தில் புனித ஜோசப் பள்ளி, நேஷனல் பள்ளி, டச்சு அகடமி உட்பட 250க்கு மேற்பட்ட மீனவ மாணவ மாணவிகள் பங்கு பெற்றவர்களுக்கு மத்திய அரசு அங்கிகாரம் பெற்று மாநில ஆளுநர் வாயிலாக வழங்கிய சான்றிதழ் வழங்கும் விழாவினை ஜெய் மனித உடல் திறன் மேம்பாடு மற்றும் தற்காப்புக் கலைகள் அகாடமி நடத்தும் நிகழ்வு பழவேற்காட்டில் உள்ள டச்சு அகாடமியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் SHIHAN C.ஜெகன், SHIHAN N.பூபாஷா ,SHIHAN N.சேகர், SHIHAN R. தினேஷ் ஆகியோர் வரவேற்பு நிகழ்த்தினார் இதில் சிறப்பு அழைப்பளர்களாக டச்சு அகாடமி ஒருங்கிணைப்பாளர் மேரி தமிழரசி,எழுத்தாளர் கடலார் க.வேலாயுதம், வழக்கறிஞர் பிரவீன் குமார் , தமிழ்நாடு காவல்துறை முத்தமிழன்,திருவள்ளுர் மாவட்டம் பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் தலைவர் எத்திராஜ்,சமூக செயற்பாட்டாளர் திரு ஹாஜா
மொய்தீன், கடல்சார் மக்கள் நல சங்கமம் அ.ஜெபராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.



0 Comments