கீழ்வேளூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா  நடைபெற்றது.பள்ளி நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா தலைமை தாங்கினார்.  முன்னாள் ஊராட்சி தலைவர் பாப்பி தண்டாயுதபாணி  முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார் நூற்றாண்டின் நிறைவிழாவை முன்னிட்டு பள்ளியில் அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபி திறந்து வைத்து பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) துரைமுருகு நினைவு பரிசு வழங்கினார். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளை கீழ்வேளூர்  வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.  

தொடர்ந்து தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விசீர் வரிசையாக தண்ணீர் ட்ரம், குடம் , மேசை, நாற்காலி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பள்ளிக்கு பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் லோகநாதன் அருள்செல்வம்,சீனிவாசன், அருள்ஜோதி, சங்கரவடிவேல், கவிதா, செல்வரத்தினம்.பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments