தவெகவில் இணைகிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி


 தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான வேலகப்பள்ளி வரப்பிரசாத் ராவ் இன்று முறைப்படி கட்சியில் இணைய உள்ளார்.ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதியின் முன்னாள் எம்.பி-யான இவர், தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக (கலெக்டர்) பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.கட்சியில் இணைவதற்காக வரப்பிரசாத் ராவ் சற்று நேரத்திற்கு முன்னர் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். கட்சியின் 3-ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், அனுபவம் வாய்ந்த ஒரு முன்னாள் அதிகாரியின் வருகை அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments