திருக்குவளை: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்



கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு  வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் பணி புறக்கணித்து கருப்பு பட்டை அணிந்து திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கால முறை ஊதியம், ஓய்வூதியம், பணி உயர்வில் 20 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அச்சங்கத்தின் வட்டத் தலைவர் விஷ்ணுவர்தன்  தலைமையில் பணி புறக்கணித்து கருப்பு பட்டை அணிந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வட்டச் செயலாளர் அஸ்வின்குமார் முன்னிலை வைத்தார்.வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.முருகையன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.வட்ட பொருளாளர் துர்கா,வட்ட துணை தலைவர் ஸ்டீபன்ராஜ், மற்றும் திருக்குவளை வட்டத்தில் உட்பட்ட பல்வேறு வருவாய் கிராம  உதவியாளர்கள் பங்கேற்றனர். நிறைவாக மாநில செயற்குழு உறுப்பினர் என்.முத்துக்குமரன் நன்றி கூறினார்.

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments