அரியலூர் மாவட்டம் ராயபுரம் கிராமத்தில் பாஜக சார்பில் இலவச கேஸ் இணைப்புகளை மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்



அரியலூர் மாவட்டம் ராயபுரம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்கின்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில்  மத்திய அரசின் உஜ்வாலா  இலவச கேஸ் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் கலந்து கொண்டு இத் திட்டத்தின் மூலமாக சுமார் 80க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச சிலிண்டர்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் நிவாஸ், மண்டல் தலைவர் ஆனந்த பிரபு ,பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் முத்துவேல் மகளிர் அணி தலைவி சந்திரா,மற்றும் மாவட்ட செயலாளர் செல்வமணி  ஆகியோர் உடன் இருந்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் தமிழ்செல்வி செய்திருந்தார்.மேலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அரியலூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய 100 வது தெருமுனை பிரச்சாரம் இதுவாகும்.

Post a Comment

0 Comments