சிங்கம்புணரி அருகே கே.புதுப்பட்டியில் அருள்பாலிக்கும் வில்லியார் சுவாமி,பெரியநாச்சி அம்மன் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது



சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கே.புதுப்பட்டியில்  அருள்பாலிக்கும் வில்லியார் சுவாமி,பெரியநாச்சி அம்மன் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கே.புதுப்பட்டியில் மூன்று தலைமுறைகள்  பழமையான வில்லியார் சுவாமி,பெரியநாச்சி அம்மன் கோவில் வீடு மஹா கும்பாபிஷேம் நடைபெற்றது.முன்னதாக வியாழக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை,ஸ்ரீ மஹாகணபதி ஹோமம்,வாஸ்து சாந்தி,கும்ப அலங்காரம்  உள்ளிட்ட பூஜைகளுடன் முதல்கால பூஜைகள் துவங்கி பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதலுடன் முடிவுற்றது. 

வெள்ளிக்கிழமை இன்று காலை மங்கள இசை,கோ பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை துவங்கி திரவ்யாகுதி, ஸ்ரீ மஹா பூர்ணாகுதி, தீபாராதனையுடன் புனிதநீர் கலசங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தை அடைந்தது அங்கு சிவாச்சாரியார்கள் குழு வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா  கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா அபிஷேகம் செய்து வைத்தனர்.இதில் கே.புதுப்பட்டி சுற்றுட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments