ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் நகர்பகுதியில் பல்வேறு தனியார் தொடக்க பள்ளிகள் உயர்நிலைபள்ளிகள் மேல்நிலைபள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைபள்ளிகளும் உள்ளன அதில் ஒற்று தெற்குமுதுகுளத்தூர் ரோட்டுபகுதியில் இயங்கிவருகின்றது இதில் சுமார் 1200 குழந்தைகள் படித்துவருகின்றனர் இந்த பள்ளியின் பின்புறம் வடக்கு முதுகுளத்தூர் ரோடு வரும் அதில் பேரூராட்சியின் மகா குப்பைகிடங்கு பழயது உள்ளது அதற்கு தள்ளி பள்ளிக்கு பின்புறம் நேராக RC சர்ச் தகன இடம் உள்ளது இதற்கு பின்னால் இருந்த காலியிடத்தில் கடந்த 1 வருடமாக புதிய குப்பைகிடங்காக பேரூராட்சி பயன்படுத்தி வருகின்றது இதற்கு ஆரம்பகட்டத்திலேயே பள்ளி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வழங்கினர் ஆனால் செயல்அலுவலர் கண்டுகொள்ளவில்லை தொடர்ந்து JCB யை கொண்டு குப்பைகளை அள்ளிகுவித்து வந்தனர்.
இதுனால் காற்றிலே துர்நாற்றம் அந்தபகுதி மக்களை சென்றடைந்தது. மேலும் பள்ளி சிறுவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது மறுபடியும் பள்ளிசார்பில் கடிதம் வழங்க எந்த பயனும் இல்லை பிரச்சனை பெரிதாக வார்டுகவுன்சிலர் ஆபிசில் இனிமேல் குப்பை கொட்டாமல் இருங்க குழந்தைகள் உயிரோடு விளையாடாதீர்கள் என தெரிவிக்க தலைமை எழுத்தர் குழந்தை இறந்தா கேஸை பார்த்துக்கிடவேண்டியது தான் என அலட்சியமாக தெரிவித்தாராம் அதிகாரியிடம்கூற. பதில் கூறாமல் இருந்தாராம் புதியதாக குப்பை கொட்ட 2 ஏக்கர் நிலம் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிலே எதுவும் செய்யாமல் உள்ளனர் தற்போது கடந்த பத்து நாட்களாக அதிகாரி துப்புரவு பணியாளர் தூய்மைபணியாளர்களை கொண்டு குப்பைகளை தட்டுகளில் அள்ளி கொண்டுபோய் கொட்டி வர செய்கின்றார் அவர்களுக்கு பாதுகாப்பு கவசமும் வழங்காமல் வேலையை அதிகமாக வாங்குகிறார் இது தொடர்பான வீடியோ போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மனிதாபமற்ற செயலோடும் மனிதஉரிமைமீறலில் தொடர்ந்து செயல்பட்டு பள்ளி மாணவ மாணவியர்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் கமுதி பேரூராட்சி செயல்அலுவலரை சஸ்பெண்ட் செய்ய கமுதி நகர சமூகஆர்வலர்களும்பொதுமக்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் மாவட்ட ஆட்சியர்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்மேலும் குப்பைகிடங்கை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமாய் பள்ளிகுழந்தைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர் மொபைல்ஸ் நடத்திவரும் ரஞ்சித் கூறியதாவது எனது இருகுழந்தைகள் அந்த பள்ளியில் தான் படிக்கின்றன மாலை வீடு திருப்புகையில் சோர்வாகவும் தலைசுற்றல் இருப்பதாக தெரிவித்து குப்பையில் இருந்து வரும் துர்நாற்றம் வருகின்றது இது பிடிக்கலை அப்பா என கூறி அழுகின்றன என்றார் மக்கள் நலனுக்கு எதிராகவும் குழந்தைகளின் உயிரோடும் விளையாடும் செயல்அலுவலரை அரசு தண்டிக்கவேண்டும் என்றார்.



0 Comments