ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சோனைபிரியன் கோட்டை கிராமத்தில் 13 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மற்றும் 3 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா 15ந்தேதி இரவு வீரகாளியம்மன் கோவில் வளாகத்தில் கிராமியகலை நிகழ்ச்சியுடன் துவங்கியது நிகழ்ச்சிக்கு பின் நள்ளிரவில் வீரகாளியம்மன் கட்டப்புளி முனீஸ்வரர் பேச்சியம்மன் சுபேத சுந்தரராஜமூர்த்தி ஆலயங்களுக்கு விசேஷபூஜைகள் நடைபெற்றன பால்குடம் தீசட்டி கரகம் எடுத்துவந்து பொதுமக்கள் நேர்த்திகடன்களை செலுத்தினார்கள் பக்தர்கள் பேச்சியம்மன் ஆலய வளாகத்தில் பூக்குழி இறங்கினார்கள் மதியம் பொதுமக்களுக்கு அசைவஉணவு அன்னதானம் வழங்கப்பட்டது காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் பங்குபெற்றன மாடுபிடி வீரர்களால் பிடிக்கமுடியாத காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு ரொக்கபணம் பரிசுகளாக வழங்கப்பட்டது.

0 Comments