சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் யூனியன் அலுவலகம் எதிரில் அதிமுக சார்பில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட அவை தலைவர் ஏ.வி.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது, முன்னதாக அதிமுக நகர செயலாளர் இப்ராம்சா அனைவரையும் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எல்.ஆர்.எம்.ராஜா, நெற்குப்பை நகர செயலாளர் அடைக்கப்பன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கே.கே. உமாதேவன் சிறப்புரையாற்றினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் நெற்குப்பை நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அழகர்சாமி, ராஜசேகர், ராபின் சையது, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் சபா ராஜா முகமது, ஆஷிப் இக்பால், பிரான்சிஸ் அந்தோணி, தெற்கு ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், வடக்கு ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் சிவசக்திநாதன், திருப்புத்தூர் நகர துணை செயலாளர் பி.ஆர்.ரவீந்திரன், திருப்புத்தூர் நகர் ஜெ பேரவை செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர இளைஞரணி செயலாளர் நவநீத பாலன், மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், நகர மகளிர் அணி செயலாளர் பிரேமா, திருப்புத்தூர் தொகுதி பாஜக பொறுப்பாளர் சொக்கலிங்கம், திருப்புத்தூர் தொகுதி இணைச் செயலாளர் ராமேஸ்வரன், தெற்கு ஒன்றிய தலைவர் தங்கபாண்டியன், வடக்கு ஒன்றிய தலைவர் மணி ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் சேது.சிவராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகப்பன், ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் வேல் மாவட்ட ஓபிசி அணி செயலாளர் ராஜா, ஆமா முக நகரச் செயலாளர் ரஹீம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், கதிர், இளையாத்தங்குடி சிவா, ஊராட்சி கழக செயலாளர் சோளம்பட்டி மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதிமுக திருப்புத்தூர் நகர அவை தலைவர் செல்லப்பாண்டியன் நன்றி கூறினார்.


0 Comments