சோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் பாண்டியன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் நூதன சித்ரகலாபரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெரு விழா வெகு விமர்சியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஸ்தபதி. அசோக் தலைமையில் மங்கல இசையுடன் மேளதாளத்துடன் விக்னேஸ்வரர் பூஜை எஜமானர் சங்கல்பம் , புண்யாக வாஜனம் , கிராம சாந்தி , வாஸ்து சாந்தி , மகாலட்சுமி பூஜை , சுபஆசரிகள் யாக பூஜை முழங்க வான வேடிக்கையுடன் கோபுர கலசத்திற்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனை அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


0 Comments