பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் நிர்வாக குழு கூட்டம்


ஈரோடு மாவட்டம் ,: சத்தியமங்கலம் ஆனைக்கொம்பு அரங்கத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பொன் தம்பிராஜன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார்.கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் நாராயணசாமி , முன்னாள் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆம்னி துரை ,  கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பெரியகாளையன்,ரமேஷ்வளவன், சிறுத்தை ராஜா,: சத்தியமூர்த்தி,ராமச்சந்திரன், வழக்கறிஞர் மாதேஷ் , பிரதீப்குமார் , சிறுத்தை சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பவானிசாகர் தொகுதி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நீலகிரி மண்டல செயலாளர் இராஜேந்திர பிரபு , நீலகிரி மண்டல துணை செயலாளர் மன்னரசன், மாநில துணை பொறுப்பாளர் சாமிநாதன் ஆகியோர் கட்சியின் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் பவானிசாகர் தொகுதியில் வாக்கு சாவடி முகவர்களை நியமனம் செய்வது குறித்தும்  உரையாற்றினார்கள்.

கலந்து கொண்ட ஒன்றிய,நகர,பேரூர் நிர்வாகிகள் சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் திருமா பிரபு, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயன், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், தாளவாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுத்தை சித்து, தாளவாடி வடக்கு ஒன்றிய செயலாளர் பசுவண்ணா, புளியம்பட்டி நகர பொறுபாளர் மயில்சாமி, அரியப்பம்பாளையம் பேரூர் செயலாளர் ஈஸ்வரன், சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் திருமா குமார்,  சத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சீதாராமன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் விஜியா, மகளிர் விடுதலை இயக்க சத்தி ஒன்றிய செயலாளர் முத்து லட்சுமி, மகளிர் விடுதலை இயக்க சத்தி நகர செயலாளர் பிரியாஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் சத்தியமங்கலம் நகர செயலாளர் சிறுத்தை சிவா நன்றியுரை ஆற்றினார்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.





Post a Comment

0 Comments