தேனி அருகே வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் அண்ணா நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து


 தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் 57 நினைவு நாளை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ குமார் கலந்துகொண்டு பொது விருந்தினை துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்வின் போது, வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி, வீரபாண்டி திமுக பேரூர் கழக செயலாளர் செல்வராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள், அருள்மிகு வீரபாண்டி ஸ்ரீ கௌமாரி அம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நாராயணி, மற்றும் இந்து சமய அறநிலையத்துறைமேலாளர் பாலசுப்ரமணியம், கணக்காளர் பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஏராளமானோர் பொது விருந்தில் கலந்து கொண்டு, உணவருந்தி சென்றனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments