நீலகிரி: மஞ்சுதளா கிராமத்தில் தமிழக அரசு தலைமை கொறடா ஒருங்கிணைந்த பல்நோக்கு கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

 


குன்னூர் கண்டோண்மென்ட் பகுதியில் உள்ள மஞ்சுதளா கிராமத்தில்  பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் செலவில் மஞ்சுதளா‌ கிராமத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அந்த கட்டிடத்தை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ராணுவ மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர்  பிரிகேடியர் கிருஷ்நேந்து தாஸ்,வெலிங்டன் கண்டோன்மென்ட்  சிறப்பு முதன்மை அதிகாரி வினோத் விக்னேஸ்வரன், நியமன உறுப்பினர் ஷீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கண்டோன்மென்ட்போர்டு அலுவலர்கள் குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம் குமார்,வெலிங்டன் நகரிய செயலாளர் மார்ட்டின், முன்னாள் துணை தலைவர் வினோத் குமார்,மற்றும் திரளான ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments