கீழையூர் அருகே தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்றாம் பருவம் “எண்ணும் எழுத்தும்” பயிற்சி


 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர்  ஒன்றிய அளவிலான எண்ணும்–எழுத்தும்” தொடர்பான முதற்கட்ட  பயிற்சி, பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி,மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.கீழ்வேளூர் ஒன்றியம் குருக்கத்தியிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,  சார்பில் முதல்வர் கி.அன்புமுத்து மற்றும் துணை முதல்வர் காமராஜ் ஆகியோர் மாவட்ட அளவிலான மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியை துவங்கி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக கீழையூர் ஒன்றிய அளவிலான எண்ணும்–எழுத்தும்” தொடர்பான முதற்கட்ட  பயிற்சி, பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி,மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.  

விரிவுரையாளர்  ஆர்‌.தேன்மொழி தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் கீழையூர் ஒன்றிய அளவில் உள்ள  அனைத்து தொடக்க பள்ளிகளைச் சேர்ந்த  ஆசிரியர்கள்   கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை சாந்தி வரவேற்றார்.பயிற்சியில் வட்டார கல்வி அலுவலர் ரவி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

முதன்மை கருத்தாளர்களாக அ.இராபர்ட்கென்னடி,ஒபிலியா,பாண்டியன்,ஆனந்தன், அன்பழகன் மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் எளிமையாக கல்வி கற்க உதவும் வகையிலான பல்வேறு பயிற்சிகளை ஆசிரியருக்கு அளித்தனர்.தொடர்ந்து,  பன்முக கற்றலுடன் பாடப்பொருள் விளக்கப்பட்டது.ஆசிரியர்கள்  மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஒன்றிய அளவிலான இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.வட்டார வள மைய  மேற்பார்வையாளர்  மகிமைரூபஸ் நன்றி கூறினார்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன்

Post a Comment

0 Comments