பராமரிப்பு பணி காரணமாக மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் பகுதி நேர ரத்து

 


தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் மீஞ்சூர்-பொன்னேரி இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய தேதி களில் இரவு 11.45 மணி முதல் காலை 4.45 மணி வரையில் (5 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்விவரம் வருமாறு:-

* சென்னை சென்டிரலில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களிலும் இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

* கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று, நாளை மறுநாள் மற்றும் 22 ஆகிய தேதிகளில் காலை 3.50 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில் கும்மி டிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments