திருவள்ளூர் மாவட்டம் ஆரணி M.K.V. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தங்கள் பள்ளிக்கும் சமூகத்திற்கும் முன்னுதாரணமான பணிகளைச் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும், பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.தியாகராய கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் டாக்டர் . G.ரவிச்சந்திர பாபு அவர்களின் G N செட்டி தெரு இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு அவரே முழு நிதி உதவியையும் வழங்கினார். முன்னாள் மாணவரும் செய்தியாளருமான . G.கருணாகரன் இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தார்.
இவ்விழாவில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளும், தூய்மைப் பணியாளர்களுக்குப் புத்தாடைகளுடன் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. ஏற்கனவே இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிகளுக்குத் தேவையான மேஜை, நாற்காலி, குடிநீர் வசதிகள் மற்றும் மாணவிகளுக்கு இலவச ஆட்டோ வசதி போன்ற பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை E.காவேரி உதவி தலைமை ஆசிரியர்கள் பாஸ்கர் பாபு,தேவராஜன் அறிவியல் ஆசிரியை சிந்தியா தேவி, பேரூராட்சி செயல் அலுவலர் அபூபக்கர், பணி நியமனக்குழு உறுப்பினர் D.கண்ணதாசன், 15-வது வார்டு கவுன்சிலர் M.குமார், வழக்கறிஞர் . D.கோபிநாத்,MABL . P.காசிநாதன், மருத்துவத்துறை, S.ஸ்ரீதர் ICF உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஆரணி M.K.V. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் மாணவிகளுக்கு சைக்கிள்களும், தூய்மைப் பணியாளர்களுக்கு பொங்கல் புத்தாடைகளும் வழங்கப்பட்டன.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் இக்குழுவினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.





0 Comments