மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளைஞர் கார்த்திக் (18), உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத் தப்பட்டன.
கமுதி கருப்பசாமி மகன் கார்த்திக் ஜன 27ல் டூ வீலரில் சென்ற போது விழுந்து பலத்த காயமடைந்தார். மதுரைஅரசு மருத்துவமனையில் மேல் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்மூளைச்சாவு அடைந்தார்.என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உடனே தாய் மல்லிகா மகனது உடல் உறுப்புகளை தானமாக தர முன் வந்தார். இதயம் சென்னைஎம்.ஜி.எம்., மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி ஸ்வேதா மருத்துவ மனைக்கும் அனுப்பப் பட்டன. சிறுநீரகங்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருச்சி காவேரி மருத்துவமனை நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டன. கருவிழிகள், தோல், எலும்பு மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
மதுரை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் தலைமையில் ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.பின்னர் உடல் ஒப்படைக்கப்பட்டது.

0 Comments