கீழராமநதி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய சமூக ஆர்வலர்


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான புனித சவேரியார் தொடக்கப்பள்ளியில் நேற்று சமூக ஆர்வலரும்,தன்னம்பிக்கை பயிற்சியாளர் மற்றும் இயற்கை ஆர்வலருமான சிவசுப்பிரமணி தனது சொந்த செலவில் மாணவ,மாணவியர் 100 பேருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு மனப்பயிற்ச்சியும் ஆரோக்கியம் குறித்து அறிவுரை வழங்கி, இனிப்பு வழங்கினார்.

மேலும் இவர் பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார் என்பதும்,இலவச கண் சிகிச்சை முகாம், இலவச ரத்ததான முகாம் மற்றும் பல்வேறு சமூக பணிகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை அம்புரோஸ் ஊராட்சி மன்ற தலைவர் அழகர்சாமி, ஓய்வு பெற்ற தபால் துறை அதிகாரி அழகர்சாமி, முன்னாள் ஜமாத் தலைவர் செய்யது அப்துல்காதர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மைதீன், பள்ளி தலைமை ஆசிரியை சுந்தரி மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை ஷேக் சிந்தா, சமூக ஆர்வலர் முகம்மது ஹபீப், நீர் பாசன தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Post a Comment

0 Comments