சாதியை கேட்டாரா.? ஆயிரம் முறை சத்தியம் செய்து சொல்லுவேன்..... பட்டிமன்ற ராஜாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட சாலமன் பாப்பையா

 


பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடைபெற்ற தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில், கலந்து கொண்டிருந்தார். அப்போது ராஜாவுக்கு உணவு சமைத்து பரிமாறிய பெண்களிடம் ஊர் பெயரை கேட்டுவிட்டு சாதியைப் பற்றி கேட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர், சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த பதிவு வைரலான நிலையில், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன.இதையடுத்து ராஜா இதற்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உணவு மிகவும் ருசியாக இருந்த காரணத்தால், அது செட்டிநாட்டு முறைப்படி சமைக்கப்பட்டதா என்பதை அறியவே "செட்டிநாடா?" என்று கேட்டேன். மற்றபடி "செட்டியாரா?" என்று சாதி ரீதியாகத் தான் கேட்கவில்லை. ஒருவர் என்ன சமூகம் என்பதை யோசிக்கும் அளவுக்கு சின்ன புத்தி எனக்கு இல்லை. தமிழ்நாட்டில் எத்தனையோ பகுதிகளுக்கு சென்று பலரையும் சந்தித்துள்ளோம். யாரையாவது சாதி மற்றும் சமய உணர்வுகளோடு பார்த்திருந்திருப்பேனா? தமிழன் என்ற ஒன்றைதான் நான் பெருமையாக கருதுகிறேன். உண்மையில் மிகவும் மன வலியுடன் இதை பேசுகிறேன். எந்த காலத்திலும் நான் அப்படி இருந்ததில்லை” என ராஜா வீடியோ மூலம் விளக்கமளித்தார்.இந்த நிலையில், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ராஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், ``யாரோ ஒரு தாய் அறிந்தோ அறியாமலோ ராஜாவை பற்றி ஒரு தவறான கணிப்பில் இச்செய்தியை வெளியிட்டிருக்கிறார். ராஜா என்னுடைய பண்ணையிலே 45 ஆண்டுகளுக்கு மேலே இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னுடைய பிள்ளை அது

நான் அங்கு இல்லாதபோது எதையும் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அவருடைய மனசுக்குள்ளே சாதிய உணர்வோ அதைப் பற்றிய சிந்தனையோ கொஞ்சமும் இல்லை என்பதை நான் ஆயிரம் முறை சத்தியம் செய்து சொல்லுவேன். அவரைப் பற்றி இப்படிச் சொன்னது மிகப்பெரிய வருத்தம்'' என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments