முதுகுளத்தூர் பேரூராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்


இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 5 மற்றும் 6 வது வார்டில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய், மற்றும்  சிமெண்ட் சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த  கவுன்சிலர்கள் கருப்பண்ணன், மீனாள் கருப்பண்ணன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.

 இந்நிலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கவுன்சிலர்கள் கருப்பண்ணன், மீனாள் கருப்பண்ணன், ஆகியோர்  ஏற்பாட்டின்  காரணமாக புதியதாக கழிவுநீர் கால்வாய், மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதி  மக்களின் நீண்ட நாள் கோரிக்கை  நிறைவேற்றப்பட்டது. இதற்காக 5 மற்றும் 6 வது வார்டுக்கு உட்பட்ட சுவாமிகள் மடத்தெரு மற்றும் அய்யனார் கோவில் தெரு,  வடக்கூர் நடுத்தெரு, முளைக்கட்டு திண்ணை தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments