என்னை பாமக தலைவராக பதிவு செய்யும் வரை தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது..... ராமதாஸ் வழக்கு

 



தன்னை பாமக தலைவராக பதிவு செய்யும் வரை தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் அன்புமணியை பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் அனுப்பியுள்ளது. 

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு எதிராக ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில் பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். சிவில் நீதிமன்றம் மூலமாக தனக்கும் அன்புமணிக்கும் இடையே இருக்கும் பிரச்சினை தீரும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments