கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர். முன்னாள் மத்திய மந்திரியான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டுள்ளார்.இதனிடையே, கேரள சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் இடதுசாரிகள் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி என 3 மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மணிசங்கர் அய்யர் இன்று நிரூபரிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது,
கடந்த ஓராண்டுக்குமேல் கூட்டாட்சி தத்துவம் தொடர்பான பல்வேறு அம்சங்களை மு.க.ஸ்டாலின் எழுப்பி வருகிறார். அவர் ஒருபோதும் பிரதமர் மோடி ஒரு திருடன் என கூறவில்லை. ராகுல் காந்தி பிரதமர் ஆவதை தடுக்க மு.க.ஸ்டாலின் நினைக்கமாட்டார். இந்தியா கூட்டணி ஒருங்கிணைக்கப்பட வேண்டுமானால் அதற்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும்.நேருவுக்கு அடுத்து காமராஜரை பிரதமராக அனைவரும் வலியுறுத்தினார். ஆனால், காமராஜர் ஒரேஒரு வார்த்தைதான் கூறினார். ஆங்கிலம், இந்தி தெரியாமல் எவ்வாறு? என்று கேட்டார். மு.க.ஸ்டாலினும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளார். ராகுல் காந்தி நாட்டின் பிரதமராகலாம். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க யாராவது இருக்க வேண்டும். அந்த பணியை மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார்.என்றார்.

0 Comments