திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் மற்றும் பெரியபாளையம் பஜார் வீதிகளில் அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.பலராமன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இ.கே.கே.கோதண்டன், மேற்கு ஒன்றிய செயலாளர் வேதகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், பஜார் வீதிகளில் உள்ள கடைகளுக்குச் சென்று பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, அனைவருக்கும் இலவசப் பேருந்து பயணம், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் மற்றும் அம்மா திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். மேலும், ஆட்டோ மற்றும் வாகனங்களில் வாக்குறுதி ஸ்டிக்கர்களை ஒட்டி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதில் அவைத்தலைவர்கள் உதயகுமார், எஸ். விஜயன், நிர்வாகிகள் கே.என்.ஏழுமலை, குசேலன், மேக்ஸி, தணிகாசலம், வெங்கடேசன், எமரோஸ், ராஜா, இரா.சீனிவாசன், கேசவன், பார்த்திபன், மகேஷ், அரிப்பாக்கம் வெங்கடேசன், ஆத்துப்பாக்கம் ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.





0 Comments