திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


 திருவள்ளூர் வடக்கு மாவட்ட  அம்மா பேரவை  செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் தினமும் 300 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் 100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திராவிட மாடல் அரசு வாக்குறுதிகளை அளித்து அதனை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  மாறாக  திராவிட மாடல் ஆட்சி காலத்தில் வெறும் 40 நாட்கள் கூட வேலை வழங்கவில்லை பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என பல்வேறு புகார் எழுந்த நிலையில் மேலும் இதில் பல்வேறு முறைகளில் ஈடுபட்டுள்ள திராவிட மாடல்  ஆட்சியை கண்டித்தும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு 125 நாட்களாக வேலையை உயர்த்தியதோடு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என அறிவித்தது அதனை சீர்குலைக்கும் வகையாக திமுக அரசு பல்வேறு முறைகளில் தாங்கள் சொந்த நலனுக்காக சீர்கேடுக்கும்  வகையில் செயல்படும்  முதலமைச்சர் ஸ்டாலின் அரசை கண்டித்து  கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் அதிமுக கழக பொதுச்செயலாளார் எடப்பாடி யார் அவர்களை முதலமைச்சராக்க வேண்டும் என்று பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



 இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி சேர்ந்த நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்    . இதில் கும்மிடிப்பூண்டி   ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ் எம் ஸ்ரீதர். டி.சி மகேந்திரன், ஜெ ரமேஷ் குமார்,  நகர செயலாளர் எஸ் டி டி ரவி. கழக.நிர்வாகிகள். ஷியாமளா தன்ராஜ் எம் எஸ் எஸ் சரவணன்.  மு.க சேகர்.இமயம் மனோஜ்.சேதுபதி.தீபா மணிகண்டன். வெங்கடேசன் குணசேகரன் தீனதயாளன். கோபி. ஓடை ராஜேந்திரன் டேவிட் சுதாகர் சுகுமாரன் சந்தோஷ. பாசறை சரவணன்.சங்கர் நாகராஜ். எம் எஸ் எஸ் வேலு.மஜீத் பாய்.விஸ்வநாதன். ரமேஷ். மகளிர் அணி நிர்வாகிகள். முன்னாள் அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்ஆகியோர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments