திருக்குவளையில் திமுக அரசை கண்டித்து பாஜக பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்



நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலான பாஜக பட்டியல அணி சார்பில்  திமுக அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. 

மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திமுக அரசு திசை திருப்பி அனுப்புவதாக குற்றம் சாட்டி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு பாஜக  பட்டியல் அணி மாவட்ட தலைவர் டி. இளவரசன் தலைமை வகித்தார்.

பாஜக மாவட்ட தலைவர் ஜி.விஜேந்திரன் முன்னிலை வகித்தார்.பாஜக கீழையூர் ஒன்றிய தலைவர் ஏ.புவனேஸ்வர்ராம்  வரவேற்றார்.பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் பேட்டை சிவா, கோட்டூர் ராகவன் மற்றும் பட்டியல் அணி மாநில செயலாளர் ஏ.டி.வி.லிங்கம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக திமுக அரசு கொடுங்கோலை ஆட்சி நடத்தி வருவதாக குற்றம் சாட்டியும் , பட்டியல் சமூக மக்களுக்கான நிதியை மற்ற திட்டங்களுக்கு மாற்றுவதை கைவிட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பப்பட்டன.இதில் பாஜக மாவட்ட பொருளாளர் பாலாஜி ராகவன், மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன், ஒன்றிய பொதுச்செயலாளர் தனசிகாமணி, ஒன்றிய பொருளாளர் அருள் மாணிக்கவாசகம், பாஜக நிர்வாகி முத்து துரைசாமி உள்ளிட்ட பாஜகவினர்,அதிமுகவினர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். 

இறுதியாக பட்டியல அணி மாவட்ட பொதுச்செயலாளர் எல். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்


Post a Comment

0 Comments