தமிழ்நாடு அரசின் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருக்குறள் பயிலரங்ககக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் பிரிவிற்காக நடைபெற்ற கூட்டத்திற்கு திட்டத்தின் பயிலரங்கக் குழுத் தலைவர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி தலைமை தாங்கினார். முதன்மை நூலகர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். கவிஞர் முத்துசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். 'பெற்றான் நெடுதுய்க்கும் ஆறு' எனும் தலைப்பில் தூய தமிழ்ப் பற்றாளர் கவிஞர் ஜெயபாலனும் 'சொல்லாடச் சோர்வு படும்' எனும் தலைப்பில் நல்லாசிரியர் முனைவர் கோ.கணபதி சுப்ரமணியனும் பயிலரங்க உரையாற்றினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு திருக்குறள் குறித்த வினாடி - வினா நிகழ்த்தப்பட்டது. இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். நூலகர் சித்திரை லிங்கம் நிறைவாக நன்றி கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பேராசிரியர் ஹரிஹரன் கலைமாமணி சந்திரபுஷ்பம், கவிஞர் சுப்பையா, கவிஞர் பிரபு, எழுத்தாளர் தளவாய், கவிஞர் புன்னைச்செழியன், லயன் ஜவகர்துரை, மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், மேனாள் துணை ஆட்சியர் தியாகராஜன், மேகலிங்கம் வெள்ளத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் இளங்கோ வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்.

0 Comments