நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க ஐந்தாம் ஆண்டு வளர்ச்சி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில தலைவர் சமூக சேவகர் விஜயராகவன் பிறந்த நாளை முன்னிட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி, காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளாக ஆதரவற்றவருக்கு தையல் இயந்திரம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு வீல் சேர், ஸ்டிக், மற்றும் 2000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் நடைபெறும் குறைதீர் நாள் கூட்டத்தில் ஏழை மக்களுக்கு முதியோர் ஓய்வு தொகை, ஆதரவற்றவர்களுக்கு நல உதவித் திட்டங்களை மனுக்களின் வாயிலாக பெற்றுத் தருகிறார் . தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற பொது நலச்சங்க தலைவர் விஜயராகவனுக்கு பிறந்தநாளை முன்னிட்டு நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து கேக் வெட்டி நல உதவி திட்டங்களை பெற்றுச் சென்றனர். இது போன்ற நல உதவி திட்டங்கள் செய்து தருவதில் . மன மகிழ்ச்சி அளிக்கிறது என சமூக சேவகர் விஜயராகவன் கூறி வருகிறார்.
நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி






0 Comments