ராமநாதபுரம்: சின்ன உடப்பங்குளத்தில் வீரியாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் நேற்று ஸ்ரீவீரீயாரி அம்மன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை முதற்கால யாக பூஜையுடன் விழா துவங்கியது.பின்னர் சனிக்கிழமை இரண்டாம் காலயாக பூஜை மற்றும் மூன்றாம் கலையாக பூஜை நடைபெற்றது. நேற்று நான்காம் கால யாக பூஜை நடைபெற்று, மஹா பூர்ணாஹதி மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்று பின்னர் ஸ்ரீ வீரீயாரி அம்மன், ஸ்ரீ கருப்பணசாமி, பால கணபதி ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பின்பு 96 வகை மூலிகை சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்று, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீ வீரீயாரி அம்மன் கோவில் கும்பிடும் பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments