அரியலூர்: உடையார்பாளையம் நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது



அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7 வது ஆண்டு விழா நடைபெற்றது.நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஜேர்மன் மற்றும் சிவா புட்ஸ் இன்பெக்ஸ் கம்பேனியின் நிர்வாக இயக்குனர் ஜி.சிவக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அவர் பேசுகையில் மாணவ மாணவிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், இவ்வாறு படிக்க வேண்டும், எப்படி படத்தால் அதிக மதிப்பெண் பெற முடியும், மாணவ மாணவிகளின் தனிப்பட்ட திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டுபிடித்து பள்ளியின் நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும், அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாணவனை தனியாக கோச்சிங் கொடுத்து தமிழ் நாடு பட்டுள்ள, இந்தியாவிற்கே சிறந்த மாணவனா கொண்டு வருவேன்.

 மேலும் அவர் பேசுகையில் மாணவர்கள் கஷ்ட்டுபட்டு படிக்காமல் இஷ்ட்டப்பட்டு சந்தோஷமாக படித்தால் எதிர் காலத்தில் கஷ்ட்டப்படாமல் சந்தோஷமாக வாழலாம் இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக பள்ளியின் தாளாளர் செரின் சித்தாரா அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், மற்றும் பெற்றோர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முடிவில் ஆசிரியர் பழனிவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.



Post a Comment

0 Comments