சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் சில முக்கியமான திட்டங்களை மேயர் அறிவித்தார்.கோடை காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும்;சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை; வீடு இல்லாதவர்களுக்கு ரூ.12 கோடி செலவில் தற்காலிக தங்கும் இடம் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுபற்றிய விவாதம் மாமன்ற கூட்டத்தில் நடைபெறும். விவாதத்திற்கு பின்னர் பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும். கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது.

0 Comments