திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்


திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்  கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரச்சாரங்களாக அச்சடித்து கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் எஸ் டி டி ரவி  ஏற்பாட்டில்  திருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் விஜயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில்  துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியில் மக்கள் படும் அவல நிலையை எடுத்து கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

 இதில் ஒன்றிய கழக செயலாளர் டி.சி மகேந்திரன், எஸ். எம் ஸ்ரீதர்,  பலவாடா. ஜெ.ரமேஷ் குமார், வேதகிரி, கோதண்டம் ,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்  எம் எஸ் எஸ் சரவணன், இளம் பெண்கள் இளைஞர்கள் பாசறை மாவட்ட செயலாளர் . சேதுபதி.தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். இமயம் மனோஜ் . மு. க சேகர். ஓடை. ராஜேந்திரன். சுகுமார்.தொழிற்சங்கம். மோகன். தீனதயாளன் ஏழுமலை. மஜீத் பாய்.. பாசறை. சரவணன்.. எம். எஸ். எஸ் வேலு.. கோபி. ராஜா.. ஐயப்பன். தீபக். மகளிர் அணி விஜயா..உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர்  ஊர்வலமாக சென்று துண்டு  பிரசுரங்களை வழங்கினார்கள்.



Post a Comment

0 Comments