அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் சொக்கநாத சுவாமி என்னும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு புதிய அறங்காவலராக மணகெதி கிராமத்தில் வசிக்கும் கோவிந்தசாமி மகன் பெரியசாமி என்பவரை அரியலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் இராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் நியமனம் செய்து அதற்கான உத்தரவை வழங்கினார்கள்.
புதிதாக பொறுப்பேற்று கொண்ட பெரியசாமி சொக்கநாத சுவாமிக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் திரவியம் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்தார்.அதன் பிறகு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வஸ்த்திரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது.இதில் மாவட்ட அறங்காவலர் இராஜேந்திரன், ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments