கும்மிடிப்பூண்டி: இந்திய சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் பாண்டிச்சேரி ஐக்கிய சிலம்பம் சங்கம் சார்பில் சிலம்பு போட்டியில் தங்கம் வென்று திரும்பிய மூன்று வீரருக்கு சிறப்பான வரவேற்பு


  இந்திய சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் பாண்டிச்சேரி ஐக்கிய சிலம்பம் சங்கம் இணைந்து 2025 .2026 ஆம் ஆண்டிற்கான 13வது தேசிய சிலம்பம் போட்டி ஜனவரி 31 முதல் பிப்ரவரி 1 வரை பாண்டிச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றார்கள் தமிழ்நாடு சார்பில் கும்மிடிப்பூண்டி டி.கே வரதராஜ ஆசான் உக்ரி சிலம்பாட்ட கலைக்கூடத்தின் பயிற்சியாளர் வினோத்குமார்  அவர்களிடம் பயிற்சி பெற்று வந்த சிறுபுழல் பேட்டை  எலைட் பள்ளியின் 11 .ஆம் வகுப்பு மாணவரும் மேட்டுத் தெருவை சார்ந்த லோகநாதன் அர்ச்சனா தம்பதியரின் மகனுமான எல். நிதீஷ்குமார் 44 To 46 எடை பிரிவில் நேரடி சண்டை மற்றும் தனிநபர் திறமை ஆகிய இரண்டு போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று வெற்றி பெற்றுள்ளார்,

 அதேபோல் டி ஜே எஸ் பள்ளியில் பயின்று வரும் 8 ஆம் வகுப்பு மாணவியும் ஜிஎன்டி சாலையை சார்ந்த முருகேசன் பேச்சியம்மாள் தம்பதியரின் மகள் எம்.யஸ்வினி என்ற மாணவி 25 To 30 கிலோ எடை பிரிவில் நேரடி சண்டை போட்டியில் தங்கப் பதக்கமும் தனித்திறன் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று வெற்றி பெற்றுள்ளார்,

 அதேபோல் கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவியும் வள்ளியம்மை நகர் பகுதியை சார்ந்த ராஜேந்திரன் திலகவதி என்ற தம்பதியரின் மகள் நவ்யாஸ்ரீ என்ற மாணவி 25 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு தனித்திறன் போட்டி மற்றும் நேரடி சண்டைப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர்கள் மூவருக்கும் இன்று கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் இருந்து பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 இந் நிகழ்வில் பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் தலைமை ஆசான் ஞானமூர்த்தி பயிற்சியாளர் வினோத்குமார் கண்ணன் பேரூர் செயலாளர் அறிவழகன் மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் டி கே மாரிமுத்து பேரூராட்சி அலுவலர் ரவி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விமலா அர்ஜுனன் தீபாமுனுசாமி கருணாகரன் முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் வேந்தன் மணியக்காரர் தெரு உமாபதி மற்றும்  பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மேளதாளத்துடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஊர்வளமாக கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து ஜிஎன்டி சாலை வழியாக ஊர்வலமாக அழைத்துச் சென்று  சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments