சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள புதுவயல் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் நுழைவாயிலில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
இப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன் பேருந்து நிலையத்திற்குள் சென்ற கல்லூரி மாணவி ஒருவர் கனரக வாகனத்தால் மோதியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், சிகிச்சை பெற்று சில நாட்களில் அவர் மரணமும் அடைந்தார், பல கனவுகளுடன் சிட்டுக்குருவியாய் பறந்து செல்லும் மாணவ மாணவியர்களின் கனவு பேருந்து நிலையத்தால் சிதைக்கப்பட்டு வருகிறது, இதை கவனமுடன் சம்பந்தப்பட்ட துறைகளான நெடுஞ்சாலை துறை, பேரூராட்சித் துறை பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருவதுடன், பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளான பேருந்து நிலையம், சாக்கோட்டை உயவந்த அம்மன் கோயில் பகுதி, மேட்டுக்கடை அருகே உள்ள வணிக வளாகம் நிறைந்த பகுதிகளில் வேகத்தடை அமைத்து தர முன் வர வேண்டும் என கோரிக்கைகளும் வலுத்து வருகிறது. இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் அரசு துறையில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் தங்களுக்கான பணிகளை கவனமுடன், அர்ப்பணிப்புடன் செயல்படவில்லை என்பதே காட்டுகிறது, இது போன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர்கள் கவனம் கொள்ள வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாகவும் எழுந்து வருகிறது, ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவான நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிர் காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் நாமும் கோரிக்கையை முன் வைக்கிறோம்.


0 Comments