நாகையில் லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு



 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மற்றும் வேதாரணியம்  லாரி உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அறிவுறுத்தலின்படி தகுதிச் சான்று கட்டண உயர்வு, வாழ்வாதார பாதிப்பு, அரசின் புதிதான நடைமுறைகள் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பான மனுவினை லாரி உரிமையாளர்கள் நாகை மாவட்ட தலைவர் பாண்டியன், வேதாரண்யம் தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

 


மத்திய மாநில அரசுகள் கனரக வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பித்து கட்டணத்தை உயர்த்தி லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது எனவும், அபராதம் விதிப்பதிலும் ஒரே நடைமுறை இருக்கும் போது புதுப்பித்தல் கட்டணத்தில் மட்டும் எதற்காக இந்த பிரிவினை ரூபாய் 850 இருந்த கட்டணம் இன்று 28 ஆயிரத்து 500 ஆக  உயர்த்தி உள்ளது  இது முன்பை விட 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் லாரி தொழில் செய்யும் அனைவரின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது, புதிய கட்டணங்களை மாற்றி பழைய கட்டணங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டியும் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Post a Comment

0 Comments