தனி நபருக்காக சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டும் பேரூராட்சி நிர்வாகம்..... நடவடிக்கை காண்பாரா ஆட்சியர்.?


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்டது புதுவயல் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தை சுற்றி நான்கு புறங்களும் சாலைகள் உள்ளன. இது அரசு ஆவணங்களில் சாலை என்று இடம்பெற்றிருப்பதாக சாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்த நிலையில், தனி நபர் ஒருவருக்கு சாலையில் கட்டிடம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

 இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டதாகவும், ஆகையால் வீதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது, சாலையினை மதகுறியீடு கொண்டு கூட ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இருக்கும் நிலையில், எப்படி பேரூராட்சி நிர்வாகம் வீதியை மன்ற கூட்டத்தில் தனி நபருக்கு தாரை வார்த்தது என்று சமூக ஆர்வலர்கள் விழி பிதுங்கி செல்கின்றனர்.

 இவ்வாறு இருக்க தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில், பத்திரப்பதிவு செய்யப்படாத சொத்துகளுக்கு வரி விதிப்பு செய்யக்கூடாது என்ற ஆணை இருந்தும் அந்த ஆணைகளை பின்பற்றாமல் தனி நபருக்கு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் எவ்வாறு தீர்மானம் இயற்றப்பட்டது என கேள்வியும் எழுகிறது. இது எப்படியோ அரசு சொத்துக்களை அழிப்பதில் அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவது கண்கூடாக தெரிய வருகிறது.இதற்கு நடவடிக்கை மாவட்ட ஆட்சியரை எடுக்க வேண்டும் என வலுவான கோரிக்கையும் எழுந்து வருகிறது.

Post a Comment

0 Comments