பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டும் தனிநபர்...... செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரை மிரட்டும் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்......


 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்டது புதுவையில் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது, அன்றிலிருந்து இன்று வரை பராமரிப்பு இல்லாத நிலையில், பேருந்து நிலையத்திற்கான அங்கீகாரம் ரத்து செய்த நிலையில், பேருந்து நிலையத்தை சுற்றிலும் நான்கு புறங்களிலும் பேரூராட்சி நிர்வாகத்திக்கு உட்பட்ட தார் சாலைகள் உள்ளது, தார் சாலைகளில்  வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதில் ஒரு கல்லூரி மாணவி இறந்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அரசும் மரியாதையும் செலுத்தப்பட்டது, இப்படி அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் சூழலில் மேற்கு புறத்தில் உள்ள சாலையில் தனி நபர் ஒருவர் கட்டிடம் கட்டி வருகிறார், இதுகுறித்து சாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலரிடம் கேள்வி எழுப்பியது போது, தங்கள் ஆவணங்களில் பொதுசாலை என்று உள்ளது ஆக்கிரமிப்பு செய்வது கூடாது எனவும் தெரிவித்தார்.

அதிமுக மாவட்ட பொறுப்பாளர் முருகையா


 இதுகுறித்து நாம் பத்திரிக்கையில் செய்தி தெரிவித்த நிலையிலும் இன்று வழக்கம்போல் கட்டிட பணிகளை அந்த தனி நபர் மேற்கொண்டு வந்தார்,.இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக செய்தி சேகரிக்க சென்ற போது, அங்கு நின்றிருந்த அதிமுக மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் தலைவர் சுதா என்பவரின் கணவருமான முருகையா என்பவர், நாங்கள் அப்படித்தான் கட்டுவோம், நீங்கள் வீடியோ எடுக்க கூடாது, அவ்வாறு எடுத்தால் நாங்கள் எந்த நிலைக்கு செல்வோம் என, அச்சுறுத்தி செய்தியாளரை மிரட்டினார், இவ்விட ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட உதவி இயக்குனர் அவர்களுடன் கேள்வி எழுப்பியபோது, பொது சாலை என்றாலும் ஆக்கிரமிப்பு செய்வதில் தவறில்லை என பதில் அளித்தார், எது எப்படியோ? அரசு நிலங்களை பாதுகாக்க வேண்டிய அரசு அலுவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது, பணமும் அதிகாரமும் இருந்தால் எதை வேண்டுமானாலும் ஆட்டைய போட்டுக் கொள்ளலாம் என்கின்ற நிலை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டு வருகிறது, இதனால் மாவட்ட ஆட்சியர் தூங்குகிறாரா? என்கின்ற சமூக ஆர்வலர்களிடையே கேள்வியும் எழுகிறது, இது போன்று பத்திரிகையாளரை மிரட்டிய அதிமுக பொறுப்பாளர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.



Post a Comment

0 Comments