முதுகுளத்தூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

 


பேரறிஞர்  அண்ணாவின்   57வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி அறிவுரையின்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.டி.செந்தில்குமார் தலைமையில் முதுகுளத்தூர் பஸ் நிலையம் எதிரில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் கழக விவசாய அணி துணை செயலாளர் சண்முகபாண்டி, மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் எஸ் .கதிரேசன், முதுகுளத்தூர் அண்ணாதொழிற்சங்க செயலாளர்முத்துவேல், மத்திய ஒன்றிய அவைத்தலைவர் முத்துமணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வெங்களகுறிச்சி ராஜசேகர்,நகர் துணை செயலாளர் டிரைவர் குருசாமி , அண்ணா தொழிற்சங்க இளவரசன் உள்பட அதிமுகவினர் திரளாக கலந்துகொள்டனர்.

Post a Comment

0 Comments