கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையத்திற்குட்பட்ட வெள்ளிக் குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை எண் 1811 மதுபானக் கடையில் 27 மதிக்கத்தக்க வாலிபர் மதுபானக் கடையில் பொட்ரோல் குண்டு வீசினார்.இதனை தொடர்ந்து கடை பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர் இருந்த போதிலும் பணியாளர்களின் செல் போன்கள் சேதமடைந்தது.இது குறித்து சிறுமுகை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் திருமதி அம்பிகா,சி.ஐ.டி. ராஜேஷ்,திமுகவின் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து அவனை கைது செய்து விசாரணைக்கு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments